ராணிப்பேட்டை அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 85 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல்லிடும் திருவிழா!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நவல்பூர் அடுத்த தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 85 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் பொங்கலிடும் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில்  இன்று முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் காட்சியளிக்க பாலாற்றங்கரையிலிருந்து பல வகை மேல தாளங்களுடன் ஜலம் திரட்டி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்தநிகழ்ச்சியினைஅதிமுகராணிப்பேட்டை மேற்கு மாவட்ட  செயலாளர். எஸ். எம். சுகுமார்தொடங்கிவைத்தார்.ராணிப்பேட்டை நவல்பூர் போன்ற முக்கிய வீதிகளின் வழியாக பால்குட ஊர்வல நிகழ்வு பல வகையான மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்டவாகனத்தில் காட்சியளித்த அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கிவழிபட்டனர்.

இந்த பால்குட ஊர்வல நிகழ்ச்சி இறுதியாக தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைவடைந்து பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக அம்மன் மீது ஊற்றப்பட்டு மஹா பாலபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை பக்தியுடன் வேண்டி வழிபாட்டில்ஈடுபட்டனர்.இந்தநிகழ்ச்சியின் போது தலைமை நாட்டாமை என். கிரிகுமரன் மற்றும் நாட்டாமை தாரர்கள் விழா குழுவினர்கள் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!