சென்னை- அம்பத்தூர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் 6000 திட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி!!
சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர், சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு சக அமைச்சர் பெருமக்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர். சு. முத்துசாமி அவர்கள் ஆகியோருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் இணைந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6000 திட்டப் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள். பா.தாயகம் கவி,கா. கணபதி, ஜோசப் சாமுவேல்,அ. வெற்றிஅழகன், மதிப்பிற்குரிய துணை மேயர். மு மகேஷ் குமார் அவர்கள், நில நிர்வாக ஆணையர். கே. எஸ். பழனிச்சாமி. இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர். ராஜகோபால் சுன்கரா, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்.ஜி.எஸ்.சமீரன். வட்டார துணை ஆணையாளர். (வடக்கு) கௌஷிக் இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக்குழுத் தலைவர்.பி.கே.மூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக