அரக்கோணத்தில் கணினி பயிற்சி முடித்த 250 பேருக்கு சான்றுகள் வழங்கிய சு. ரவி எம்.எல்.ஏ!!



ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டையில் சி. எஸ் .சி .கம்ப்யூட்டர் பயிற்சி கூடம் திறப்பு மற்றும் சான்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சி.எஸ்.சி  நிர்வாக அலுவலர். கணேஷ் ஐயன் பெருமாள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். மேலாளர். சுமன்பாபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு கம்ப்யூட்டர் பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பயிற்சிகள் முடித்த 250 மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் ஜெயா கல்லூரி முதல்வர் முனைவர். ஷேம் மீரான் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் செயல் தலைவர். கே. எம். தேவராஜ் மஹாலட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர். லட்சயகுமார், அருணா கேட்டரிங்  நிறுவன தலைவர். வடிவேலு அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை தலைவர். டாக்டர். சுகந்தி வினோதினி உட்பட அரசியல்  பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியினை ஆசிரியர். ராமமூர்த்தி தொகுத்து வழங்கினார். அன்பு நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!