அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு 2 டாயலிசிஸ் இயந்திரம் வேண்டும் அரக்கோணம் எம். எல் .ஏ. சு.ரவி வேண்டுகோள்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுநீரகம் பாதிப்படைந்த ஏழை எளிய மக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை சென்று டயாலிசிஸ் செய்யும் அவலநிலை உள்ளது. அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் 5-டயாலிசிஸ் இயந்திரம் உள்ளது. 6-மணி நேரம் கணக்கிட்டு இரண்டு சிப்ட் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 20-பேர் டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். ஆனால் 25-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொள்ள பதிவு செய்து வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே நடந்து வரும் இரண்டு சிப்ட் முறையை கூடுதலாக மூன்று சிப்ட் முறையில் டயாலிசிஸ் செய்யுங்கள் என கோரிக்கை வைத்தால், டயாலிசிஸ் Technician க்கு மாத ஊதியம் ரூ.10,000/- மட்டுமே கிடைக்கிறது. தனியார் மருத்துவனையில் மாத ஊதியம் ரூ.15,000/- க்கு மேல் தருகிறார்கள் என்று வர மறுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே அரக்கோணம் பகுதியிலே இருக்கக்கூடிய சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெற உடனடியாக டயாலிசிஸ் Technician க்கு மாத உதவித்தொகை ரூ.15,000/- கொடுத்து, கூடுதலாக ஒரு சிப்டும், கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் இயந்திரமும் உடனடியாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!