அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா! நகர் மன்ற தலைவர். லட்சுமி பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களும் வழங்கப்பட்டது அதன் ஒரு பகுதிய ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வார்டு - 4, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் விலை இல்லா பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். எம். கே. சிவா தலைமை தாங்கினார்.
4வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர். செந்தில் குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுஜாதேவி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர். லட்சுமி மற்றும் நகர மன்ற உறுப்பினர். சாமுண்டீஸ்வரி கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் 6வது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 150 மாணவிகளுக்கான பாட புத்தகங்கள் வழங்கபட்டன.
முன்னதாக எட்டு வகுப்பறை கொண்ட கட்டிட கட்டுமான பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். உதவி தலைமை ஆசிரியர். சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.





கருத்துகள்
கருத்துரையிடுக