நெமிலி அருகே பள்ளூரில் நடைபெற்ற மஹாசண்டியாகம்! நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்பு!!

இராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தில் 108 அடி உயரஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி ஆலய மும் 108 பரிகார சிலைகளும் அமைந்து உள்ளது. இங்கு உலக நலன் வேண்டி 17ந் தேதி மற்றும் 18ந் தேதி என இரு நாட்கள் மஹா சண்டியாகம் நடத்த ஏற்பாடு செய்யபட்டது. இதனை தொடர்ந்து முதல் நாள் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது 2-ம் நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மக்கள் நலன் பெற வேண்டி நடத்தபட்ட சிவாச்சரி யர் சோமு குருக்கள் மகன்கள் நடத்தினர்.யாகத்தில் ஆயிரவகையான திரவிய பொருட்கள் பட்டுபுடவைகள் பழவகைகளுடன் ஸ்ரீ மஹா காளி சண்டி யாகம்மஹாலட்சுமி சண்டியாகம் ஸ்ரீ சங்கரி யாகம். ஸ்ரீ ஜெயதுர்கா யாகம் ஸ்ரீ பத்மதவதி சண்டி மற்றும் ஸ்ரீராஜ மாதாங்கி சண்டி யாகம் ஸ்ரீ சரஸ்வதி யாகம் ஸ்ரீ பவாணி சண்டி யாகம்

அர்த்ததாம்பிகா சண்டி யாகம்ஸ்ரீ காமேஸ்வரி யாகம் ஸ்ரீ புவனேஸ்வரி சண்டி யாகம்: ஸ்ரீ அக்னி துர்கா சண்டி, ஸ்ரீ சிவதாக சண்டி யாகம் என 13 வகையான யாகங்கள் நடைபெற்றன.தொடர்ந்து துர்கா ல்ட்சுமி சரஸ்வதி சண்டிகதேவி கலச தீர்த்தம் பக்தர்களுக்கு தெளிக்கபட்டு பிரசாங்களும் அன்னதானமும் வழங்கபட்டது

இதன் மூலம் பக்தர்களின் வாழ்க்கையில் வெற்றி, திருமணம் மற்றும் தொழிலில் முன்னேற்றம், தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என எதிர்பார்க்கபடுகிறது. யாகத்திற்கான முழு ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர்.   மணி முதலியார் மற்றும் திருநாவுக்கரசு முதலியார்குமரவேல் முதலியார் உட்பட  கிராம பொது மக்கள் இளைஞர்கள் ஆகியோரும் ஈடுபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!