கடலூர் அருகே குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு போதை பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார் .ஐ.பி.எஸ்!!

கடலூர் மாவட்டம்,குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள்  மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  அரசாங்கத்தில் பணியாற்றும் 90 சதவீதம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு பள்ளியிலிருந்து படித்து வந்தவர்கள்தான். அதற்கு உதாரணம்  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் நான்  உங்களை போன்று  அரசு பள்ளியில் படித்துத்தான். இப்பதவிக்கு வந்துள்ளேன் . 

அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லா விதத்திலும் தகுதியானவர்கள் எனவே அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்வி பயின்று ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் மேலும்   தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டுதலை பின்பற்றி வேண்டும் எனவும், போதைப் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும் , போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!