பண்ருட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடைவீதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியினை துவக்கி வைத்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பருவநிலை மாற்றம் அதனைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2016 இன் கீழ் மேற்கொள்ளப்படும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் உலர் கழிவுகளை (பிளாஸ்டிக்) தினசரி நேரடியாக சென்று வணிக நிறுவனங்களில் பெற்று அதில் மறுசுழற்சி செய்திடும் பொருட்டு பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ரோடு பெருமாள் கோயில் அருகில் இருந்து கொடிய அசைத்து கடைவீதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
உடன் நகர மன்ற துணை தலைவர். சிவா நகராட்சி ஆணையாளர். பொறுப்பு கண்ணன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ் சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் மாவட்ட வர்த்தக சங்க மண்டல தலைவர். சண்முகம் அனைத்து வியாபாரி சங்க செயலாளர். ராஜா மாவட்ட துணை செயலாளர். ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள். நகர திமுக கழக நிர்வாகிகள். வணிகர் சங்க நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக