அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்!!



ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு   கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர். அசோகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். க.கௌதம், ஆசிரியர்கள் தினேஷ், அன்பரசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர். முருகன் வரவேற்றார். ஆசிரியர். ரஜினிபிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும் வழக்கறிஞர். எஸ்.வசந்த் கலந்து கொண்டு போதை பொருள் தீமைகள் மற்றும் ஆபத்துகள் குறித்து விளக்கி பேசினார். 

சிறப்பு அழைப்பாளர்களாக  செல்ப் அறக்கட்டளை செயலாளர். கோவி.பார்த்திபன், குளோ ஜேம்ஸ், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள்  வே.தேவி, ஹரிஷ், ஜான், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு 

போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு உணவுக்குழாய்,  கணையம், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாததால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு, மூளையில் பாதிப்பு   மனச்சோர்வு, மனக்குழப்பம் போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் சந்திக்க வேண்டும் 

ஆகவே நம்மை சீரழிக்கும் போதை பொருள் பழக்கத்தை எதிர்ப்போம் என  பேசினார்கள். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுமதி, செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர். கோமதி ஆகியோர் சிறப்பு அணிவகுப்புடன் வரவேற்பு அளித்தனர். ஆசிரியர் தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!