ராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியிக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்ற தங்கபாண்டியன் .எம். எல் .ஏ!!




விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை மாண்புமிகு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பதை தொர்ந்துஜமீன்நல்லமங்கலம் ஊராட்சி,  மேலவரகுணராமபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் 'பாளையத்து பாண்டியர்' தங்கபாண்டியன் MLA  அவர்களும் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் அவர்களும் மாணவ செல்வங்களை பள்ளிக்கு வரவேற்றனர்.



மேலும் இப்பள்ளி கடந்த ஆண்டு வரையில் உயர்நிலை பள்ளியாக செயல்பட்டு வந்தது. அதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயர்நிலை பள்ளியை  மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி MLA அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற MLA அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும், கல்வி அலுவலர்களிடமும் கோரிக்கை வைத்து இந்த ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கு பள்ளி சார்பாகவும், மாணவர் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நமது மாவட்டத்திலுள்ள மாண்புமிகு வருவாய்துறை அவர்களுக்கும் மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து MLA அவர்களும் முன்னாள் ஒன்றிய சேர்மன் அவர்களும் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி 11ம் வகுப்பிற்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை காவ்யா என்ற மாணவியை வைத்து திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து இராஜபாளையம் S.Sஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் MLA அவர்கள் தொடங்கி வைத்து,



10வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் MLA அவர்களும், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் அவர்களும் வாரிய துணை தலைவர் ராசா அருண்மொழி அவர்களும் மாணவர்களுக்கு மாலர்மாலை அணிவித்து வரவேற்று நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.



இந்நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் MLA அவர்கள், பள்ளிக்கல்வித்துறைக்கென நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பல்வேறு திட்டங்களான காலை சிற்றுண்டி திட்டம்,  நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற மிக சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ளார்கள். அதுபோல் அனைத்து நலத்திட்ங்களையும் பயன்படுத்தி மாணவச்செல்வங்கள் அனைவரும் நன்றாக படித்து தங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரிய பெருமக்களும் பெறுமை சேர்க்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.




இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள், வட்டார கல்வி அலுவலர் அவர்கள், சமூக நலத்துறை அலுவலர் அவர்கள், தலைமை ஆசிரியர்கள், கழக நிர்வாகிகள். நாகேஸ்வரன், கருப்பையா, உமா, தங்கவேலு, கருப்பழகு, கலைச்செல்வம், சிங்கராஜா, ரமேஷ், செல்வம், பெருமாள் , திராவிடர் கட்சி, திருப்பதி ஆசிரிய பெருமக்கள் மாணவச்செல்வங்கள், பெற்றோர்கள் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!