அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் பண்ணையில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!

திருவண்ணாமலை மாவட்டம்,அரசு  உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆய்வு பயணத்தின் போது அங்கு அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் கூட்டுறவு பால் பண்ணையில் பால் பவுடர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், பாலில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும்,பால் பண்ணையை மேம்படுத்துவது குறித்தும்,

அரசு உறுதிமொழியில் அடிப்படையில் அங்கே 60.14 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பால் பவுடர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பார்வையிட்டு நிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும்,மேலும் 3 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் .எம். எல். ஏ. இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!