பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடநூல்கள் மற்றும்மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாடநூல்கள் சீருடைகள் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா! பள்ளி தலைமையாசிரியர்.க ஆலமர் செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர்கள்.B. ஹேமலதா, ஆர். மாலதி ஆகியோர் முன்னிலையத்தினர்.தேசிய மாணவர் படை அலுவலர். முனைவர்.ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பண்ருட்டி நகர மன்ற தலைவர்.க. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். வீ. லோகநாதன் பள்ளி வளர்ச்சி குழு துணைத் தலைவர் .ஈ. பழனி.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியர். லட்சுமி காந்தன் அவர்கள் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக