காங்கேயம் அருகே சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற புதிய கான்கிரீட் சாலை திறப்பு விழாவில் அமைச்சர். மு .பெ. சாமிநாதன் பங்கேற்பு!!

ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், திப்பம்பாளையம், புதுப்பாளையம் ஊராட்சி மற்றும் எல்லைகிராமம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் ஆகிய வளர்ச்சி திட்டங்களின் கீழ் ஓர் அடுக்கு கப்பி சாலை அமைத்தல் மற்றும் தார்சாலை புதுப்பித்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கு அடிக்கல் மற்றும் புதிய கான்கிரீட் சாலை திறப்பு விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர். மு .பெ. சாமிநாதன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். 

உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர். (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர். இல.பத்மநாபன் அவர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!