கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம்! ஜெயக்குமார். ஐ.பி.எஸ் பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. இந்தியர்களுடைய ஆதிகாலத்து பழக்க வழக்கம் மருந்தில்லா மருத்துவம். யோகாவை எங்கு வேண்டுமானாலும், எந்த இடத்திலும் பயிற்சி மேற்கொள்ளலாம். 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்  எனவே நமது  உடலினை வலிமைபடுத்த தினமும் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய ஆரோக்கியம் பணியிலும் குடும்ப நலனிலும் சிறப்பாக செயல்பட முடியும் என காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார்.ஐ.பி.எஸ் அவர்கள் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பண்டராஜ், காவல் ஆய்வாளர். அருட்செல்வன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!