பனப்பாக்கத்தில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்ஆரணி, பனப்பாக்கத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைச்சர். ஆர்.காந்தி பேச்சு!!

 

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள். பெ. வடிவேலு, எஸ்.ஜி‌.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்ரங்கன் வரவேற்றார். அப்போது அமைச்சர் காந்தி பேசியதாவது:

பனப்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலகமே போற்றும் வகையில் நல்லாட்சி நடந்து வருகிறது. ஜவுளி துறையில் சென்வாட் வரியை நீக்கி நெசவாளர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கண்டவர் முதல்வர் ஸ்டாலின். பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு நெசவு எந்திரங்களுக்கு 6 சதவீத வட்டி மானியம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜவுளி பூங்காவும், வெகு விரைவில் பனப்பாக்கத்தில் ஜவுளி பூங்காவும் அமைக்கப்படும் என அவர் பேசினார். 

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர். சுந்தரமூர்த்தி, பனப்பாக்கம் டவுன் பஞ். தலைவர் கவிதா, அரக்கோணம் நகர செயலாளர். ஜோதி, ஒன்றிய செயலாளர். பசுபதி, நெமிலி நகர செயலாளர். ஜனார்த்தனன், இளைஞரணி நிர்வாகி. ராகேஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பனப்பாக்கம் நகர செயலாளர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!