திருவதிகை பகுதியில் உள்ள பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நகர மன்ற தலைவர் .க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம் , முத்தமிழ் அறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று 6.6.2025 பண்ருட்டி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான .க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் திருவதிகை பகுதியில் உள்ள பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, பென்சில், ரப்பர், வாட்டர் பாட்டில், சாக்லேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்.ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி. பிரபு,நகர மன்ற உறுப்பினர்கள். ரிஸ்வான் சாதிக். ஷமீம் பேகம் சலீம். வார்டு அவைத் தலைவர். மோகன் வார்டு செயலாளர்கள். டி.ஆர். ராஜு, அன்பரசு, கிருஷ்ணமூர்த்தி நகர இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர். பாலச்சந்தர் ராஜா வட்ட பிரதிநிதி. ரவி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக