மதுரையில் நடைபெற்ற பிஜேபியின் மாவட்ட மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம்! உள்துறை அமைச்சர். அமித்ஷா பங்கேற்பு!!
மதுரை மாவட்டம்,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @amitshahofficial ஜி அவர்கள் கலந்து கொண்டு தலைமையேற்ற, @bjp4tamilnadu மாநில, மாவட்ட, மண்டல் அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர். @narendramodi ஜி அவர்கள் தலைமையிலான ஆட்சியில், உலகம் மெச்சத்தக்க அளவிலான அசுர வேக பொருளாதார வளர்ச்சி, தேசம் முழுவதுமுள்ள அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றம், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள், நமது பெண்களின் குறிப்பிடத்தக்க தொழிற்பங்களிப்பு மற்றும் விவசாய நலன் என்று, கடந்த 11 ஆண்டுகளில் இந்த தேசம் கண்டிருக்கும் வளர்ச்சி என்பது அளப்பரியது.
இந்த பொற்கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து, வருகின்ற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில், நமது கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான உத்வேகமானது, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர். வாயிலாக பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊழல் ஆட்சி முறையை கீழிறக்கி, அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம். என பாஜக மாநில தலைவர். நாயனார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான @nainar_nagenthran அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைபொறுப்பாளர் , @reddysudhakar21 அவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர். சகோதரர். @annamalai_kuppusamy அவர்கள், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான @drtamilisai4bjp அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர். @vanathibjp அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள், நமது மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக-வின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக