பண்ருட்டி நகராட்சியில் நடைபெற்ற மாஸ் கிளினிங் மூலம் தூய்மைப்பணி! நகர் மன்ற தலைவர்.க. ராஜேந்திரன் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகரத்தை சுகாதாரமாகவும் தூய்மையகவும் வைத்துக் கொள்ளும் வகையில் தூய்மை பணியாளர் குழுவாக இணைந்து தொடர்ச்சியாக மாஸ் கிளீனிங் மூலம் தூய்மைப் பணி நடைபெற்றது இன்று 26.6.2025 பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு திருவதிகை எம்.ஜிஆர் நகர் பகுதியில் குப்பைகள் மற்றும் கால்வாய் சுத்தம் செய்தல் ரோடு ஓரங்களில் உள்ள மரம் செடி கொடிகளை மினி ஜேசிபி மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான.க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது உடன் சுகாதார அலுவலர். கிருஷ்ணராஜ்
சுகாதார ஆய்வாளர். சந்திரகுமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர். லாவண்யா, முத்துவேல், கிருஷ்ணராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.









கருத்துகள்
கருத்துரையிடுக