கரூர் அருகே காதாப்பாறை ஊராட்சியில் தார் சாலை மேம்படுத்தும் பணி மற்றும் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, காதப்பாறை ஊராட்சியில், வாங்கப்பாளையம் முதல் வாங்கல் ரோடு வரை தார் சாலைகளை மேம்படுத்தும் பணி மற்றும் நேதாஜி நகரில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும்,கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.





கருத்துகள்
கருத்துரையிடுக