கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம்,மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக