அரக்கோணத்தில் நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் கண்ணொளி மற்றும் எஸ். என். ஆர். பாராட்டு விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையில் போலீஸ் பொதுமக்கள் கண்ணொளி திட்ட ஒருங்கிணைப்பாளர். டாக்டர். எஸ்.என்.ஆர் பாராட்டு விழா!  நடைபெற்றது. போலீஸ் பொதுமக்கள் கண்ணொளி திட்ட தலைவர். ஐ.பி.எஸ். சிவக்குமார் நல்லாசியுடன் நடந்த பாராட்டு விழாவில் ஏழைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டன மேலும் 30 பேர் தங்கள் கண்களை தானமாக வழங்க முன் வந்தனர். விழாவிற்கு டாக்டர்.எஸ். என் .ஆர். தலைமை தாங்கினார். முத்துலட்சுமி வரவேற்றார். 

விழாவில் சிறப்ப அழைப்பாளர்களாக அறம் அறக்கட்டளை தலைவர் முனைவர். கலைநேசன் தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். ஏ. தங்கமணி, நகர மன்ற உறுப்பினர். ஜெயபால் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர். காந்திராஜ் ஆகியோருடன் ஈ .கே. ஆர். வின்சென்ட், அம்மனுர் பால்ராஜ் கலந்து கொண்டனர். 

மேலும் ஆதரிக்கும் கரங்கள் அறக்கட்டளை குழுவினர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளில் சாம்சன். ஜெயக்குமார், கௌரி, கஜேந்திரன், டாக்டர். கார்த்திக் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!