அரக்கோணம் அரசு கல்லூரி சீர்கேட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! சு.ரவி எம்.எல்.ஏ பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது இங்கு  நிர்வாக சீர்கேடு அதிகரித்து இருப்பதாக கூறி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு  தலைமை தாங்கி பேசினார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி. எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு  பேசிய போது கல்லூரி அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்  ஆனால் இன்று 52 பேராசிரியர்கள் இல்லாமல் கல்லூரி நடைபெறுவதால் மாணவர் சேர்க்கை 250 ஆக குறைந்து உள்ளது மேலும் கல்லூரி முதல்வர் கல்லூரிக்கு வராமல் இருப்பதால் சீர்கேடு அதிகரித்து விட்டதை கண்டிக்கிறோம் என பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் டாக்டர். பன்னீர்செல்வம், ஷியாம் குமார் மாவட்ட துணைச் செயலாளர். மீனா மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹரிஹரன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர். தேவன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். பி .ஏ. பாலு  ஒன்றிய செயலாளர். விஜயன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். வழக்கறிஞர். பிரகதீஸ்வரன்  ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள். நா.சங்கர்  அமுல் ராஜ்  இலுப்பை தண்டலம் கழக வழக்கறிஞர். மனோகர்  தக்கோலம் நகர துணை செயலாளர். சுதாகர், அரக்கோணம் முன்னாள் சேர்மன்கள். பால்ராஜ், சீனிவாசன், கண்ணதாசன் ஒன்றிய மகளீரணி

செயலாளர். சீதாப்ரிய ராஜா அரக்கோணம் வட்டச் செயலாளர். எஸ். டி. ராஜேஷ்  மற்றும் யோகானந்த், பிரகாஷ், பரமசிவம் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!