சிதம்பரத்தில் நடைபெற்றதேசிய மாணவர் படை - ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம்!!

தேசிய மாணவர் படை ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தென்றல் விடுதியில் தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் மற்றும் ஐ .யூ. சி. முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.இத்தொடக் விழாவிற்கு தமிழ்நாடு ஆறாவது படை பிரிவின் அதிகாரி கர்னல் .சக்கரவர்த்தி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.இம் முகாமில் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படையின் வரலாறு,துப்பாக்கி சுடுதல்,சுகாதாரம், தீ தடுப்பு, மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்,கருத்து உருவாக்கப் போட்டி,மேப் ரீடிங்,உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளது.தொடக்க விழாவில் சுவேதார் மேஜர். சத்தியம்,அண்ணாமலை பல்கலைக்கழக தேசிய மாணவர் படை மேஜர்கள். கனகராஜ்,சேவி கேப்டன் நளினி, ஜே. சி. ஓ .தேவேந்தர் சிங் , பட்டாலியன் ஹவில்தார்  மேஜர் செல்வகுமார்.முதல் நிலை அலுவலர்கள் சந்திரபாபு, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளிதேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆஉள்ளிட்ட கலந்து கொண்டனர்.முகாமில் 540க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரியை சார்ந்த தேசிய மாணவர் படை மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!