கடலூர் பேருந்து நிலையம் எங்கு அமைக்கப்படும்? மக்கள் வைத்த கோரிக்கை !!


கடலூர் மாவட்டம்,கடலூருக்கு புதிய பேருந்து நிலையமானது விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பைபாஸ் சாலை அருகே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூர் கடந்த 3 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

இரண்டு பேருந்து நிலையங்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனால், கடலூரில் இருக்கின்ற பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது. கடலூர் மாநகராட்சியாக இருந்தும், பேருந்து நிலையம் சிறியதாக உள்ளது. இதனால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்டப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், கடல் அருகே இருப்பதாலும் சமீபத்தில் பெய்த மழையால் அந்த இடம் கடல் போல் காட்சியளித்தது. இதனால், அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்ட வேண்டாம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். "ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்டினால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்" என்று மக்கள் கூறுகின்றனர்.

மாற்று இடமாக, எம்.புதூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், கடலூர் பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை. புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டால், பேருந்துகள் கடலூர் நகரத்திற்குள் வராமல் bypass-லேயே சென்றுவிடும் என்று மக்கள் கருதுகின்றனர். "பைபாஸ் அருகில் பேருந்து நிலையம் அமைத்தால், அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வரும்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

புதிய வழித்தடங்களில் பேருந்து வசதிகள்புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், கடலூருக்கு புதிய இணைப்பு சாலைகள் கிடைக்கும். மேலும், பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். "சமூக வலைத்தளங்களில் புதிய பேருந்து நிலையம் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்" என்பது குறிப்பிடத்தக்கது எனவே, கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நிலவன் டிவி சார்பாகவும் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காதா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!