சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி தொடங்கி வைத்த துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!
சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் இன்று நடைபெற்ற விழாவின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திராவிட_மாடல் அரசு அமைந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட நிகழ்வில் அமைச்சர். கே. என்.நேரு அவர்கள் பங்கேற்றார்.
அதை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில், பணியில் ஈடுபடுத்துவதற்காக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர 2 பேட்டரி வாகனங்கள், சிறிய அளவிலான குப்பைகளை பெருக்கும் 2 இயந்திர வாகனங்கள், 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 11 புதிய வாகனங்களின் பயன்பாட்டை மாண்புமிகு துணை முதலமைச்சர். அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர். பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர். ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர்.கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்.இ.பரந்தாமன், துணை மேயர். மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர். முனைவர். தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர். ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர். டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர். கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர். எஸ். சிவராசு, இ.ஆ.ப., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக