கடலூர் சில்வர் பீச்சில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிருஷ்ணசுவாமி வித்யாநிகேதன் பள்ளிமாணவர்களின் யோகா நிகழ்ச்சி!!

கடலூர் மாவட்டம்,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணசுவாமி வித்யாநிகேதன் பள்ளி மாணவர்கள் ஜூன் 21ஆம் தேதி கடலூர் சில்வர் பீச்சில் காலை 6 மணியளவில் யோகா நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாடினர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக Dr. யமுனா கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் பத்மஸ்ரீ ராஜகோபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ரொமிலா. யோகா ஆசிரியர் கல்பனா மற்றும்

மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானத்தில் ஈடுபட்டு, உடல் மற்றும் மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!