அரக்கோணம் குமரன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரிப்பு பரிசோதனை முகாம்!!


அரக்கோணம் ஜூன் 15

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சுவால்பேட்டை சத்தியமூர்த்தி தெருவில் குமரன் மருத்துவமனை அமைந்து உள்ளது, இங்கு  பல்வேறு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு பயனுள்ள இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கருத்தரிப்பு பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக. சென்னை ஏ4

கருத்தரித்தல் மையத்துடன் இணைந்து குழந்தை யின்மைக்கான சிறப்பு இலவச மருத்துவ ஆலோசனை முகாமிற்கு குமான் மருத்துவமனை நிறுவனர். வாழ வந்தாள் தலைமை தாங்கினார். மக பேறு நிபுணர். ஐஸ்வரியா குத்து விளக்கேற்றினார். முத்த ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர். பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர். குமரன் கலந்து கொண்டார்.  சென்னையைச் சேர்ந்த சிறப்பு கருத்தரிப்பு நிபுணர். டாக்டர். அருணா அசோக் முகாமில் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் 

குழந்தையின்மைக்கான கலந்தாய்வு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இலவச விந்தனு பரிசோதனை  ஸ்கேன் சிகிச்சை களுடன் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கினார். இந்த சிறப்பு முகாமின் மூலம் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!