விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவம் கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்!!


விழுப்புரம் மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து, காணொளி காட்சி வாயிலாக பொது நூலக இயக்ககம் சார்பில்,விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு நூலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, நூலகத்தினை பார்வையிட்டார்.

உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் முதல்வர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மரு.கீதாஞ்சலி, மருத்துவநிலைய அலுவலர் மரு.ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கணேஷ்குமார், உதவி மருத்துவ நிலைய அலுவலர் வெங்கடேசன், மாவட்ட நூலக அலுவலர் (பொ)மு.காசீம், மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன் உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!