நெய்வேலி அருகே போதை குட்கா பொருட்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில், ஊ.மங்கலம் காவல் ஆய்வாளர். ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர். ஆனந்தன் மற்றும் போலீசார் அரசகுழி டாஸ்மாக் கடை அருகில் உள்ள சுந்தரமூர்த்தி காம்ப்ளக்ஸ் கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்காக ஹான்ஸ், கூலிப் , விமல், RMD போதை பாக்கு பாக்கெட்டுகள் 360 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்ததை கைப்பற்றி, போதை குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த எதிரி வீரசிங்கம் வயது 39, த/பெ அன்பழகன், VIP நகர், V. குமாரமங்கலம், விருத்தாச்சலம் என்பவர் மீது ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மொத்த மதிப்பு ரூபாய். 2,80,476 ஆகும். போதை குட்கா பொருட்களை பிடித்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக