சிதம்பரம் அருகே 5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வியாபாரத்திற்காக பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நபர்கள்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS  அவர்களின் உத்தரவின்பேரில், சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்களின் அறிவுரையின்படி சிதம்பரம் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த தகவலின் பெயரில் 7.6.2025 அன்று  அண்ணாமலை பல்கலைக்கழகம் ரெட்டை குளம் அருகே எதிரிகள் 1.கங்கி நரசிம்மா வயது 40, த/பெ கிருஷ்ணா.

வாரங்கல், ஆந்திரா மாநிலம் 2.ஆகாஷ் வயது 24, த/பெ மணிமேக், எம்.கே.தோட்டம், 3.மகேஷ் வயது 25,த/பெ மாரியப்பன், பள்ளிப்படை, 4.கிருபாநந்தன் வயது 32, த/பெ பன்னீர், பள்ளிப்படை மற்றும் தலைமறைவானவர்கள் 5.ராகுல் சிதம்பரநாதன் பேட்டை, 6.கோகுல்ராஜ் (எ ) மல்லாட்டை 7.சேரநீதி எம்.கே.தோட்டம் ஆகியோர் சேர்ந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வியாபாரத்திற்காக பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தபோது அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர் மற்றும் உதவி ஆய்வாளர். பிரகாஷ் மற்றும் காவலர்கள். மணிகண்டன்,  ராஜீவ்காந்தி,  ஞானப்பிரகாசம்,  ஆனந்த்ரமணி, தமிழரசன் ஆகிய கொண்ட காவல் குழுவினர் மேற்படி எதிரிகளை வளைத்துப் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் KTM பைக் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!