தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 44 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர். கே. என் .நேரு!!

மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 49 இளநிலை உதவியாளரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக, இதர 44 இளநிலை உதவியாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் .கே. என். நேரு அவர்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!