அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சியில் 29 பழங்குடியினர்கள் வீடு கட்ட பூமி பூஜை ஒன்றிய குழ உறுப்பினர். நரேஷ் அடிக்கல்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டித்தர வேண்டும் என ஜமாபந்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜமாபந்தி நிறைவு விழாவில் அம் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து தலா ரூ.5.07 லட்சம் மதிப்பில் 29 குடும்பத்தினருக்கு பி.எம்.எ.ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆகவே புதிய வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிடிஓ. தாசபிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர். ஜெரால்டு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கவுன்சிலர். நரேஷ் கலந்து கொண்டு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சியர். ஜே. யு. சந்திரகலாவிற்கு நன்றி கூறி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மண்டல துணை பிடிஓ லஜ்வந்தி, ஓவர்சீயர் ரூபி உள்ளிட்ட பழங்குடியினர் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக