நாகப்பட்டினத்தில் உள்ள திருக்கோயில்களில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி!


நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம், அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 2025 – 2026 ஆம்  நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில்,  திருக்கோயில்களில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று (05.06.2025) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தனர்.


உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர். பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர். என்.கௌதமன், சட்டமன்ற உறுப்பினர். முகமது ஷானவாஸ், நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர். இரா. மாரிமுத்து, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர். நாகரத்தினம், மண்டல இணை ஆணையர். வி.குமரேசன், துணை ஆணையர். பி. ராணி , உதவி ஆணையர்.எஸ்.இராஜாஇளம்பெருவழுதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!