அரக்கோணத்தில் நடைபெற்ற அ இஜமக பொது குழு கூட்டத்தில் 2026 தேர்தலில் போட்டிடும் 15 வேட்பாளர்கள் அறிமுகம்!!



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை தலைமை இடமாகக் கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர். டாக்டர். ஐசக் ஐயா தலைமை தாங்கி நடத்தினார். டேவிட் குட்டி, தேவசித்தம் ,மோசஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைத்து பேசப்பட்டன மேலும் சோளிங்கர் திருத்தணி அரக்கோணம் ஈரோடு ராயபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 15 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து  தீர்மானம் வாசிக்கப்பட்டது அதில் மத்திய மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு 10.5% வழங்க வேண்டும் தவித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஒரே தேசம் ஒரே மொழி ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும்  நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும் தேசிய அளவில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் புதிய கல்விக் கொள்கை முறையை மாநிலத்தின் மீது திணிக்க வேண்டாம் அத்தியாவசிய


உணவுப் பொருட்களான பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுகளை கட்டுபடுத்த வேண்டும்    ராணிப்பேட்டை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்ட மாவட்டம் உருவாக்க வேண்டும் இதில் அரக்கோணம் திருத்தணி நகரம் ஒன்றியம் திருவாலங்காடு நகர ஒன்றியம் நெமிலி நகர ஒன்றியம் இடம்பெற வேண்டும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் அகில இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர். ஸ்ரீதர் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!