அரக்கோணத்தில் ரூ .2 கோடி மதிப்பீட்டில் கட்டிய 3 நகராட்சி பள்ளி கட்டிடங்கள் காணொளியில் திறந்து வைத்த துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!


அரக்கோணம் ஜூன் 12 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் 3 வார்டுகளில் ரூபாய் 2 கோடி 10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 12 வகுப்பு அறைகள் திறப்பு விழா  நடைபெற்றது தமிழகமெங்கும் பள்ளி கட்டிடங்கள் திறக்கும் விழாவின் ஒரு பகுதியாக அரக்கோணம்  வார்டு.19-காந்திநகர் பள்ளி, வார்டு .23-ஜெயின் நகராட்சி பள்ளி மற்றும் வார்டு .11- போலாட்சி அம்மன் பள்ளி என மூன்று பள்ளிகளின் 12 வகுப்பறை கட்டிடம் திறக்கபட்டது.



இதற்காகசென்னையில் இருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்  காணொளியின் மூலம்  திறந்து வைத்தார். அதனை  தொடர்ந்து இங்கு பள்ளி வளாகத்தில் நகரமன்ற தலைவர். லட்சுமி . உடன் ஆணையாளர் செந்தில குமார் பொறியாளர். செல்வகுமார் மாவட்ட கல்வி அலுவலர்கள் கர்ணாமூர்த்தி, வசந்தகுமார் துணை தலைவர். கலாவதி, கவுன்சிலர்கள். சாமுண்டி ஸ்வரி, அன்பு, ரேவதி, கன்னியப்பன், செந்தில்குமார், மாலின் சிட்டிபாபு, ரஸிதா உட்பட பள்ளிஆசிரியர்கள் கலந்து கொண்டுகுத்து விளக்கேற்றினார்.  


முன்னதாக தலைமை ஆசிரியர். மரியா ஜெயசீலன் வரவேற்றார். எஸ்.எம்.சி தலைவர். ராஜாத்தி முன்னிலை வகித்தார்.  ஆசிரியர்கள். பிரகாசம், தண்டபாணி மற்றும் நகராட்சி அலுவலர். நேதாஜி ஆகியோர் விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!