பண்ருட்டியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பண்ருட்டி நகர மன்ற தலைவர், நகர செயலாளர். க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்,கடலூர் மேற்கு மாவட்ட தலைவர்,பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். கே. நந்த கோபால கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பண்ருட்டி நகரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து,மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி இரு சக்கர வாகன பேரணியாக வார்டு வார்டுகளாக இனிப்புகள் வழங்கியும்,அன்னதானம் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது
உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்,நகரக் கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் நகர மன்ற உறுப்பினர்கள், கிளைக் கழக செயலாளர்கள் சார்பு அணியை சார்ந்த நிர்வாகிகள்,வியாபாரப் பெருமக்கள்,பொதுமக்கள் பங்கேற்றனர்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக