சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம்!


சென்னை,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போது நிலை உள்ளிட்டவை குறித்து அமைச்சர். கே. என். நேரு அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர்/ அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், முனைவர்.எஸ்.விஜயகுமார், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி அரசு முதன்மை செயலாளர்/ ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர்,கே. விவேகானந்தன், இ.ஆ.ப., புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம், மேலாண்மை இயக்குநர், திரு.ஹனிஷ் சாப்ரா, இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர், டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்,கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர், .எஸ்.சிவராசு, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!