சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் இரண்டு பெண்களை கத்தியால் குத்திய வாலிபர் ஒரு பெண் பலி!
ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் பெண்கள் மட்டுமே இருந்த வீட்டில் புகுந்த மர்ம நபர் இரண்டு பெண்களை சாரா மாறியாக கத்தியால் குத்திதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலி இன்னொரு பெண் உயிருக்காக போராட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் இரண்டு பெண்களை கத்தியால் குத்திய வாலிபர் திருவள்ளுவர் மாவட்டம் அம்மையார் குப்பம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெகத்குமார் இவருக்கும் கே ஜி கண்டிகை சார்ந்த பிரியா அவருக்கும் திருமணம் ஆகி கார்த்திகேயன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளனர்.ஜெகத் குமாரும் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து பிரியா தன் ஊரான கே ஜி கண்டிகையில் வாழ்ந்து வருகிறார் தன் மகன் கார்த்திகேயனுடன் ஜெகத்குமார் தன் மகளான ஜனனி உடன் சோலிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் வார சந்தை பின்புறத்தில் புதியதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
ஜனனி திருவள்ளுவர் மாவட்டம் கேஜி கண்டிகையில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பதினோராம் வகுப்பு செல்ல தயாராக உள்ளார் இந்த நிலையில் ஜெகன் வீட்டிற்கு தன் அக்கா வாணி ஜெகத் குமார்அக்கா. அக்கா மகள் லக்ஷயா .சரண்யா. ஆகிய மூவரும் சென்னை அயனாவரத்தில் இருந்து தன் மாமா வீட்டிற்கு புலிவலம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
ஜெகத்குமார் தச்சு வேலை செய்வதினால் அவர் வேலைக்கு சென்று விட்டார்.இந்த வீட்டில் ஜெகத் குமாரின் அக்கா வாணி அக்கா மகள் லக்ஷயா. சரண்யா .ஜெகத் குமாரின் மகள் ஜனனி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.இந்த நிலையில் ஏற்கனவே மர்ம நபர் யாருக்கும் தெரியாமல் வீட்டினில் புகுந்து பதுங்கி இருப்பது தெரியாமல் இருந்துள்ளனர். திடீரென்று மர்ம நபர் ஜனனி குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அத்தை மகள் லக்ஷயா ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பதுங்கி இருந்த மர்ம நபர் திடீரென்று உள்தாழ்பால் போட ஆரம்பித்துள்ளார்.
இதனைக் கண்ட இலக்கியா ஜனனி இருவரும் நீ யார் எதற்காக உள் தாழ்ப்பால் போடுகிறாய் என்று கூச்சல் போட்டுள்ளனர். லக்ஷயா உள்தாய் பாலை திறக்கச் செல்லும் பொழுது மர்மநபர் லக்ஷ்யாவை ஆங்காங்கே கத்தியால் குத்தியுள்ளார்.அப்படியும் போராடி லட்சிய கதவை திறந்து கொண்டு வெளியே வந்து கூச்சலிட உள்ளே இருந்த மர்ம நபர் உள்தழ் பால் போட்டு கொண்டு ஜனனியை கண்டதுண்டமாக வெட்டி எறிந்து விட்டு வீட்டில் பதுங்கி இருந்துள்ளான்.
வெளியே வந்த லக்ஷயா கத்திக்குத்து பட்டுள்ளதை கண்ட ஊர் மக்கள் உடனடியாக லக்ஷயாவை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் பொதுமக்கள் ஓடி சென்று இரும்புராடால் கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது ஜனனி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். மர்ம நபரை பிடித்து வெளியே கொண்டு வந்து ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.குத்து காயங்கள் பட்ட லக்ஷயாவை மீட்டு சோளிங்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன ஜனனியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வெட்டிய மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவன் யார் இவன் எந்த ஊர் சார்ந்தவன் எதற்காக இரு வரை வெட்டினான் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெட்டிய மர்ம நபர் பெயர் சுப்பிரமணி திருவள்ளுவர் மாவட்டம் கே ஜி கண்டிகை கிராமம் என தெரிய வந்துள்ளது
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக