கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் பெரிய அலையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை காப்பாற்றிய காவல்துறையினர்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை ஆகிய கடற்கரை பகுதிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தடுக்கும் பொருட்டு காவல்துறை மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7.5.2025 ம் தேதி சாமியார்பேட்டை கடற்கரையில் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி குடும்பத்தாருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது தட்சிணாமூர்த்தி மகள் காவியா பெரிய அலையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர். கலைச்செல்வன், முதல் நிலை காவலர். வெங்கடாஜலபதி ஆகியோர் கடலில் இருந்து மீட்டு அவர்களை முதலுதவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக