ராஜபாளையம் கிராம பகுதிகளில் முறையாக தாமிரபரணி குடிநீர் வழங்குவது குறித்து நடைபெற்ற ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் தங்கபாண்டியன். எம். எல் .ஏ. பங்கேற்பு


சென்னை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர். கிரண்குர்லா.,I.A.S அவர்களை 07.05.2025 அன்று  MLA அவர்கள்  நேரில் சந்தித்து விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை மனுவை வழங்கினார்,  அதனடிப்படையில்  இராஜபாளையம் கிராமப்பகுதிகளில் முறையாக தாமிரபரணி குடிநீர் வழங்குவது குறித்து இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாளையத்து பாண்டியர். MLA S.தங்கப்பாண்டியன்  அவர்கள் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள்  ஹரிகோவிந்த் பாலசங்கரன் அவர்கள்  ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசௌந்தரி அவர்கள் முன்னிலையில் ஆலோசனை மற்றும் ஆய்வுக்  கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் குறைவாக தாமிரபரணி குடிநீர் வரும் பகுதிகளில் அதை சரிசெய்வதற்கும் தெற்குமீனாட்சிபுரம், கிரிஸ்துராஜபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக குழாய் பதித்து தாமிரபரணி குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கிருஷ்ணாபுரம் மெயின் சாலையில் செல்வதால் சாலையும்  பழுதடைகிறது அதனையும் சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதனைத்தொடர்ந்து சிலகிராமப்பகுதிகளில் தாமிரபரணி குடிநீர்வழங்கப்படாமல் உள்ளதைஇன்னும் 10நாட்களில் சரி செய்து முறையாக தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மனு அளித்தவுடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துகொடுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் உயர்திரு. கிரண்குர்லா.,I.A.S அவர்களுக்கு இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தங்கபாண்டியன் MLA அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சரவணமுருகன்  அனைத்து ஊராட்சி செயலர்கள் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கற்பகம்  அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!