பண்ருட்டி- சாராய வியாபாரி குண்டர்தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு கடலூர் கலெக்டர் நடவடிக்கை!


கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போலீசார் கடந்த மாதம் 10ம்தேதி  பண்ருட்டி அடுத்த சொரத்தூர்-நெய்வேலி டவுன்ஷூப் சாலையில்தீவிர மது வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சொரத்தூர் முந்திரி தோப்பில் உள்ள கொட்டகையை சோதனை செய்ததில் 180 அளவு கொண்ட 435 மது பாட்டில்கள்அங்கு இருந்தது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து சொரத்தூரை  சேர்ந்த ரமேஷ்  (40),  கிருஷ்ணன் (57),  சங்கர் (எ) உதயசங்கர் ( 42 ) ஆகியோர்களை கைது செய்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து,காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் நந்தகுமார்  விசாரணை மேற்கொண்டதில்  கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது நெய்வேலி டவுன்ஷூப் காவல் நிலையத்தில் 12 சாராய வழக்குகள் உள்ளது. இவரின் தொடர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்   ஓராண்டுகாலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் ரமேஷ் குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!