ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்!


கடலூர் மாவட்டம, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில் கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி உதவி மாவட்ட அலுவலர் பா. விஜயகுமார் அவர்கள் முன்னிலையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தற்போது கோடைகாலம் என்பதால் வெப்பத்தின் காரணமாக மாவட்டத்தில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் காவல்துறையினர் இணைந்து விரைவாக தீயணைப்பு மேற்கொள்வது குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தீ விபத்து ஏற்பட்டால் அவசரகால இலவச உதவி எண் 112  அழைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலந்து ஆலோசிக்கப்பட்டது.  கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள். ரூபன்குமார், ராஜா, பாலகிருஷ்ணன், விஜிகுமார், லமேக், இராதாகிருஷ்ணன், மோகன் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!