ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
விருதுநகர் மாவட்டம்,மாண்புமிகு கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுககழக துணை பொதுச்செயலாளர், மாநிலங்களவை குழுத் தலைவர் மாண்புமிகு திருச்சி சிவா.,MP அவர்களும் விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் அவர்களும், சிறப்புரையாற்றினார்கள்.
அதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் 12ம் வகுப்பில் விருதுநகர் மாவட்ட அளவில் முதல் இடம் (596/600) பெற்ற கேசா டி மீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த R.மனீஷ் என்ற மாணவருக்கு கல்வி உதவிக்காக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் 105-வது மாத ஊதியமான 1,05,000 ரூபாயை மாண்புமிகு கழக துணை பொதுச்செயலாளர் அவர்களும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும் மாணவரிடம் வழங்கி பாராட்டினார்கள்.
இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் Dr.ராணிஸ்ரீகுமார்.,MP அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள், மாவட்ட துணை செயலாளர், வாரிய துணை தலைவர் ராசா அருண்மொழி அவர்கள், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைசெயலாளர் Ex.MLA வி.பி.ராசன்,
நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, Ex.ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், , பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், நகர துணை சேர்மன் கல்பனா குழந்தைவேலு, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர்கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர் பேரூர் மன்ற உறுப்பினர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் என திரலாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக