அரக்கோணத்தில் போலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழா!சிவக்குமார் .ஐ.பி.எஸ் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தனியார் மண்டபத்தில் போலீஸ் பொது மக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா! மற்றும் விருது வழங்கும் விழா! கண்ணொளி அறக்கட்டளை துவக்க விழா! அப்பாசாமி புத்தக வெளியீட்டு விழா! மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் என ஐம்பெரும் விழா  நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர். டாக்டர்.எஸ். என். ஆர். தலைமை தாங்கினார்.அகிலன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக சென்னை காவல்துறை ஐடிஓஎல் கடத்தல் தடுப்புப் பிரிவு டாக்டர். சிவகுமார். ஐ.பி.எஸ் கலந்து கொண்டு ஐம்பெரும் விழாவை சிறப்பு செய்து நல உதவிகளையும் வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மோடி மிஷன் தலைவர் அருள் தாஸ் அறம் அறக்கட்டளை தலைவர் &முனைவர் கலை நேசன் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் துரைபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில்  சிறப்பு விருதுகளை வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர். செங்குட்டுவேல் காவல்துறைவிருதுகளை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் தாலுக்கா காவல் ஆய்வாளர். பழனிவேல் பெற்றுக் கொண்டனர்.மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!