விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறை கட்டிடம் காட்டும் பணிக்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

விழுப்புரம் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளி காட்சி வாயிலாக, உயர்கல்வித் துறை சார்பில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஒப்பனை அறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம்  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். இரா.இலட்சுமணன்அவர்களும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் அவர்களும் கலந்து கொண்டு  கட்டுமான பணியினை துவக்கி வைத்தனர். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவக்குமார், பொதுப்பணித் துறை (தொழில்நுட்பக் கல்வி) உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!