நெமிலி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்கு மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கடனை திருப்பி தராத தொழிலாளியைமின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சிறுவளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டு (45), கூலித்தொழி லாளி. இவருக்கு சரோஜா என்ற மனைவியும். 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பாண்டு அதே பகுதியை சேர்ந்த செந்தில்(48) என்பவரிடம் நகை மற்றும் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் செந்தில் நேற்று இரவு கொடுத்த பணத்தை திரும்பி கேட்க பாண்டுவின் வீட்டிற்கு சென்று, எப்பொழுது பணத்தை திருப்பி தரு வாய் என்று கேட்டுள் ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்புக்கும் கைகலப்பு இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அம்மன் கோயில் அருகேயுள்ள மின்கம்பத்தில் பாண்டுவை கட்டிவைத்து சரமாரியாகதாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பஉத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று மின் கம்பத் தில் கட்டி வைக்கப்பட்டி ருந்த பாண்டுவை மீட்டு, செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!