வாலாஜா டோல்கேட் அருகே உழவர் தியாகிகள் தினம் முன்னிட்டு நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகில் தனியார் மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டம் ( உழவர் தியாகிகள் தினம் )மாநில தலைவர் கொளத்தூர் கே எம் வெங்கடேசன் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாரதி வரவேற்றார். 

பாகுவெளி பி சேகர், ஆறுமுகம், பாலாஜி புருஷோத்தமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன் நாயுடு , பாலாறு இயக்கம்  காஞ்சி அமுதன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்தன், 

மாநில துணைப் பொதுச் செயலாளர் விநாயகம், மாநில பொருளாளர் வெங்கடேசன் , மாநில தலைவர் , ஆலோசகர் , வாக்கடை புருஷோத்தமன் , ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள், மேலும் செயற்குழு கூட்டத்தில்  

1, மேல் அரசம்பட்டு அணையை உடனடியாக கட்ட வேண்டும்.

2, இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசு மின்சார திருத்த சட்டம் 2020 - சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் 

3, ராணிப்பேட்டையில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி ( IVPM ) நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து 

விவசாயிகளுக்கு தரமான கால்நடை நோய் தடுப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போன்ற 26 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!