திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர். கே.என் நேரு!


திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்னும் சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். 

இந்நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ள பேருந்து நிலையத்தில் நகர்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர். கே.என் நேரு அவர்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் அரசு விழா நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் திமுக கழக அரசின் ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழப்போவது நிச்சயம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது,  மாவட்ட ஆட்சித்தலைவர்.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர். வே. சரவணன் இ.ஆ.ப., அவர்கள், காவல் ஆணையர். காமினி அவர்கள், ஆகியோருடன் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கரூர் & திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!