அரக்கோணத்தில் நடைபெற்ற குரு நினைவு தினம்! வன்னியர் சங்கம் அஞ்சலி!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர சுவால் பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த வன்னியர் சங்கம் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தின் காவலராக பணியாற்றிய காடுவெட்டி குருவின் (எம் எல் ஏ ) ஏழாவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது இதனை முன்னிட்டு அன்னாரது உருவபடம் வன்னியர் சங்க கட்டிடத்தின் முன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது அந்த பட அஞ்சலி கூட்டம் மாவட்ட துணை செயலாளர் ஜே மணி தலைமையில் நடைபெற்றது.  நகர துணைச் செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். வன்னியர் சங்க நகர தலைவர் AM சீனிவாசன் அனைவரை வரவேற்றார். 

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக் மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை மேற்கு ஒன்றிய தலைவர் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் கூட்டத்தில் பிரபாகரன் தமிழ்மணி ரஞ்சித் பிரசாந்த் மோகன் முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு ஆகியோரும் கலந்து கொண்டு குரு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!