பண்ருட்டியில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் பாராட்டு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி வளர்ச்சி குழு தலைவரும், பண்ருட்டி நகர மன்ற தலைவருமான திரு. கே .ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து கூறி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் க. ஆலமர்செல்வன் அவர்களும், பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ ஆகியோர் உடனிருந்தனர். நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் T.தமிழ்ச்செல்வன் 545 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும் , பள்ளி மாணவர் தலைவன் S. தனுஷ் 527 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் . பா. ராகுல் 526 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர். பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ. ஜாகிர் உசேன் அவர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வீ. லோகநாதன் அவர்களும், பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் E. பழனி அவர்களும், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெ. மஞ்சுளா தேவி அவர்களும் ,பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர் நகர மன்ற உறுப்பினர் . சண்முகவள்ளி பழனி அவர்களும், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்களும் , ஆசிரியர்களும், பெற்றோர்களும் மற்றும் மாணவ - மாணவிகளும் பாராட்டடி வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக